;
Athirady Tamil News

சூடானில் இரு தரப்பினருக்கு இடையே பயங்கர மோதல் – 168 பேர் பலி..!!

0

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாட்டில் 2003 ஆம் ஆண்டு முதல் டர்பர் மாகாணத்தை மையமாக கொண்டு உள்நாட்டு போர் நிலவி வந்தது.

டர்பர் மாகாணத்தின் பெரும் பகுதிகளை தங்கள் வசம் வைத்துள்ள சூடான் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், சூடானின் மேற்கு பகுதியில் உள்ள டர்பர் மாகாணத்தின் தலைநகர் ஜெனீனாவில் வசிக்கும் பழங்குடியினரில் இரு பிரிவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பையும் சேர்ந்த தனி நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கோஷ்டி மோதலாக வெடித்தது. இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். வீடுகள் சூறையாடப்பட்ட ன.

கடந்த இரு நாட்களாக நடந்த இந்த மோதலில் 168 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும், இந்த மோதலில் 98-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மேலும் அந்த மாகாணத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சூடான் அரசு உயர்மட்ட அதிகாரிகளை அங்கு அனுப்பி வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.