;
Athirady Tamil News

“ராஜபக்ஸ நிழல் அரசாங்கம்” – சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள அறிவிப்பு!! (வீடியோ)

0

ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கத்தின் வழமையான மிருகத்தனம் மற்றும் உத்தியோகபூர்வ வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய “ராஜபக்ஸ நிழல் அரசாங்கம்” இன்று காலை காலிமுகத்திடல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

அதனைப் செய்தியிட வந்த பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கவீனமான போர்வீரர்களும் அந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு முகங்கொடுக்க நேரிட்டதோடு இந்த தாக்குதல் உண்மையான அர்த்தத்திலயே கொடூரமான உத்தியோகபூர்வ வன்முறையாகும்.

புதிய ஜனாதிபதி பதிவிக்கு வந்து ஒரு நாள் கழிவதற்குள் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலைத் தொடுத்துள்ளதுடன் தனது எதிர்கால ஆட்சியின் தன்மை என்பதை இதன் மூலம் உணர்த்த முற்பட்டுள்ளார் என்றால், இவ்வாறான அட்டூழியங்களுக்கு அப்பாற்பட்ட பலமிக்க அரசாங்கங்கள் மக்கள் சக்தியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டதை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

அந்தந்த சிவில் போராட்டத்தின் போராளிகள் ஆக்கிரமித்திருந்த இடங்கள் அனைத்தையும் மீள கையளித்து கொண்டிருக்கும் போதும், அதற்குள், பாதுகாப்புப் படையினர் விடியற்காலையில் புகுந்து, “உயர் உத்தரவுப்படி” இந்த கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். ராஜபக்ஸ அரசை வீட்டுக்கு அனுப்ப முற்படுவதற்கு எதிராக வெறியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் அது அவ்வாறு இல்லை என்று நினைக்க எந்த காரணமும் இல்லை.

போராடுவதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் நாட்டு மக்களுக்குள்ள ஜனநாயக உரிமையை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். அரச சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தாமல், வன்முறைக்குப் பதிலாக நாகரீகமான போராட்டங்களுக்காக நாங்கள் தொடர்ந்து முன் நிற்கிறோம்.

ஒரு புறம் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுத்தது காலிமுகத்திடல் உட்பட இந்நாட்டு மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவினாலாகும். எனினும் இந்த போராட்டம் அவரை ஜனாதிபதியாவதற்கு சிறிதும் ஊக்கமளிக்கவில்லை என்றாலும், அதன் மூலம் அவர் அதிகாரத்தைப் பெற்றார்.

தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 12 மணித்தியாலங்கள் செல்வதற்கு முன் அதனை ஜனாதிபதி மறந்து விட்டார் என்பது வருத்தமளிக்கிறது என்பதோடு, ஒருவேளை ராஜபக்ஸ ஆட்சி கவிழ்க்கப்பட்டமைக்கு போராட்டம் காரணமாக அமைந்ததன் கோபமாக கூட இருக்கலாம்.

முன்னைய ராஜபக்ஸ அரசாங்கம் நாகரீக நாடாக எழுந்து நிற்பதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் அழித்தொழித்தது என்பதோடு, அதுவே தற்போதைய “ராஜபக்ஸ நிழல் அரசாங்கத்தில்” நடக்க ஆரம்பித்துள்ளது. ராஜபக்ஸ வெறியை விடவும் தீவிர வெறியாக மாறியிருப்பது தான் வித்தியாசமாக உள்ளது.

இந்த நாடு எவ்வளவு பாதாளப் படுகுழியில் வீழ்ந்துள்ளது என்பதை புரிந்து கொள்வதற்குப் பதிலாக, தனது அதிகாரத் திட்டத்திற்காக மட்டுமே செயல்படும் இந்த “ராஜ்பக்ஸவின் நிழல் அரசாங்கம்” மக்களின் அடிப்படை உரிமையான எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையையும், சுதந்திரத்தையும் மீறியுள்ளதோடு, ஊடகவியலாளர்களுக்கு உரித்தான சுதந்திரத்தையும் கொடூரமான முறையில் மீறியுள்ளது.

ஆயுதம் ஏந்தியவர்கள், அங்கவீனர்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்திய உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதோடு, இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உத்தரவிட்ட அனைவருக்கும் எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான தாக்குதலால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்பதோடு, தாக்குதலின் உள்ளார்ந்த வெறுப்புடன் அதைக் கண்டிக்கிறோம். நமது நாட்டை கோத்திர நிலைக்கு தள்ள முயலும் “ராஜபக்ஸ நிழல் அரசுக்கு” எதிராக முழு நாடும் எழுந்து நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசுக்கு வலியுறுத்துகிறோம்!

சஜித் பிரேமதாஸ – எதிர்க்கட்சி தலைவர்




காலிமுகத்திடல் சம்பவம்:ஐக்கிய நாடுகள் சபை கவலை !! (வீடியோ)

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல்; அமைச்சரவை பதவிப்பிரமாணம் !! (வீடியோ)

24 மணி நேரத்திற்குள் சர்வாதிகாரியாக நிரூபித்த ரணில் – சம்பிக்க!! (வீடியோ)

உரிமைகள் மீறல்; மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் !! (வீடியோ)

கொடுங்கோல் ராஜபக்சேக்களாக உருமாறிய ரணில் விக்கிரமசிங்கே-கொழும்பு அடக்குமுறைக்கு உலக நாடுகள் கண்டனம் !! (படங்கள், வீடியோ)

பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம்! (வீடியோ)

இன்று கறுப்பு தினம்: சட்டத்தரணிகள் சங்கம் !! (வீடியோ)

இலங்கையின் புதிய பிரதமராகும் தினேஷ் குணவர்தன? யார் இவர்.. இக்கட்டான சூழலில் இருந்து நாட்டை மீட்பாரா!!

அதிவிசேட வர்த்தமானி வெளியானது!!! (வீடியோ)

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் : அமெரிக்க தூதுவர் கவலை!!

கோட்டா கோ கம இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்!! (படங்கள், வீடியோ)

இலங்கை ராணுவம் நள்ளிரவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: பிபிசி தமிழ் செய்தியாளரும் தாக்கப்பட்டார்!! (படங்கள், வீடியோ)

கொழும்பு அதிபர் செயலகத்தில் பாதுகாப்பு படைகள் அதிகரிப்பு. நள்ளிரவில் குவியும் போராட்டக்காரர்கள்!! (படங்கள்)

சீனாவின் கண்மூடித்தனமான கடன்பொறியே இலங்கையில் அழிவுக்கு காரணம் – அமெரிக்கா!!

நான் ராஜபக்சே சகோதரர்களின் கூட்டாளியா? யார் சொன்னது? பத்திரிகையாளர் கேள்விக்கு செம டென்ஷனான ரணில்!!

ரணில் விக்ரமசிங்க: இலங்கையில் பௌத்த முன்னுரிமையை தவிர்ப்பதற்காக ஜனாதிபதிக்கான கொடியை தடை செய்தாரா? (படங்கள்)

இலங்கையில் போராட்டம் போதும்… முடித்துக்கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ!!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க: “போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை” (படங்கள்)

ஜனாதிபதிப் பதவியேற்கும் நிகழ்வில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதா?

போராட்டக்காரர்களின் நாளைய திட்டம் !!

ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம்!!

ரணில் ஜனாதிபதியாக காரணமானவர்களை அம்பலப்படுத்தினர் விமல் !!

போராட்டக்காரர்கள் “கோ-ஹோம்-ரணில்” போராட்டத்தை, தடையின்றி நடத்த கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா பிரதேசம் ஒதுக்கி தரப்படும்!!

ஐ.நா படைகள் இலங்கைக்கு வரும்!!

‘பாராளுமன்றம் தீ வைக்கப்படும் என அச்சம்’ !!

சஜித் அணியில் ஒருவர் இராஜினாமா !!

இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு- கொழும்பில் ஓயாத போராட்டம்!!

இலங்கை நெருக்கடி: ரணிலை விழிபிதுங்க வைக்கும் 6 தலை வலிகள் தாக்குப்பிடிப்பாரா? (படங்கள்)

’ராஜபக்ஷக்களுக்கு நான் நண்பன் இல்லை’ !!

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம்!!

இலங்கை ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் தெரிவில், தமிழ் எம்.பிக்களின் பங்களிப்பு என்ன? (படங்கள்)

8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் இன்று பதவிப் பிரமாணம்!!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை!!

இலங்கையில் சரித்திரம் படைத்த தனி ஒரு எம்.பி. ரணில் விக்கிரமசிங்கே! பொருளாதார பேரழிவை சீரமைப்பாரா? (படங்கள்)

திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் !!

நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பாதுகாப்புப் படையினர் !!

எமது வேட்பாளர் தோல்வியடைந்துவிட்டார்- மஹிந்த!!

நான் புதிய ஜனாதிபதி என அறிவித்தமை எனக்கு மகிழ்ச்சி – ரணில் !!

இலங்கை ஜனாதிபதியை தெரிவு மறுத்தது இந்தியா!!

ரணிலின் வெற்றி எப்படி சாத்தியமானது? சுமந்திரன் கேள்வி !!

பண்டாரநாயக்கவின் சிலையை சுற்றியிருக்க தடை !!

ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தார் நாமல்!! (வீடியோ)

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: தனியொரு எம்.பி ஆக இருந்து 8வது ஜனாதிபதி ஆன இவர் யார்? (படங்கள், வீடியோ)

புதிய ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!! (வீடியோ)

ரணில் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்!! (வீடியோ)

ஜனாதிபதித் தேர்தல்: தற்போது கிடைத்த பெறுபேறு!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பினை மேற்கொண்டது.!! (வீடியோ, படங்கள்)

வாக்களித்தார் இரா.சம்பந்தன் ஐயா !! (வீடியோ)

வாக்களிப்பை புறக்கணித்தார் கஜேந்திரகுமார் !! (வீடியோ)

சேலைன் போத்தலுடன் வாக்களித்த எம்.பி !! (வீடியோ)

வாக்கெடுப்பு ஆரம்பம் !! (வீடியோ)

இலங்கையில் அதிபர் தேர்தல்..நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு – மும்முனை போட்டியில் வெல்வது யார்? (படங்கள்)

இலங்கை நெருக்கடி: “அன்று சாப்ட்வேர் எஞ்சினீயர், இன்று செருப்புகூட இல்லை” – ஒரு போராட்டக்காரரின் கதை!!

நன்றி தெரிவித்தார் டலஸ் அழகப்பெரும !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.