;
Athirady Tamil News

ஊரடங்கின் போது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில டிப்ஸ்!! (மருத்துவம்)

0

கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வீட்டில் முடங்கி கொண்டிருக்கிறோம்.

உலக நாடுகளை முடக்கி வைத்திருக்கும் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அனைத்து பகுதிகளும் மூடப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அலுவலகங்கள் வீட்டில் இருந்தபடியே வேலைபார்க்க சொல்லிவிட்டன.

இதுபோன்ற ஒரு நேரத்தில், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிக முக்கியம். உடற்பயிற்சி இல்லாமல், அமர்ந்தே அல்லது படுத்தே இருந்தால், அது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆதலால், நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் கலோரிகளை எரிக்க என்ன செய்யலாம்? என்பதை பற்றி பார்க்கலாம்.

உடற்பயிற்சி அவசியம் :

தினமும் ஜாக்கிங் அல்லது ஜிம்மிற்கு செல்பவர்கள் தற்போது வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் உங்கள் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சிகளையும், யோகா போன்றவையும் செய்யலாம். வீட்டில் இருந்தபடியே எவ்வாறு உடற்பயிற்சி செய்யலாம்? என்று பல வீடியோக்கள் உங்களுக்கு வழிகாட்டும்.

நடந்து கொண்டே பேசுங்கள் :

வீட்டில் இருக்கும் இந்த நாள்களில் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது சக ஊழியர்களுடன் தொடர்ந்து பழகுவதற்கான ஒரே வழி தொலைப்பேசி தான். ஒவ்வொரு முறையும் உங்களுக்கு அழைப்பு வரும்போது எழுந்து சென்று நடந்து கொண்டே பேசுங்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக சுற்றி வருகிறீர்களோ, அவ்வளவு உடல் ரீதியாக நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

குழந்தைகளுடன் விளையாடுங்கள் :

வேலை நாள்களில் வீட்டில் இருப்பவர்களிடம் பேச, குழந்தைகளிடம் விளையாட போதிய நேரம் கிடைக்காது. இந்தச் சூழலில் உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் நேரத்தை செலவிடலாம்.

வீட்டு வேலைகளை செய்யுங்கள் :

வீட்டு வேலைகள் அல்லது பணிகளை செய்வது உங்கள் உடலில் இருக்கும் கலோரிகள் எரிப்பதை இரட்டிப்பாக்கும். இந்த வழி உங்களுக்கு எடை குறைக்கவும் உதவுகிறது.

தினமும் குனிந்து பெருக்குவதால் உடல் வளைவதும், குனிவதும் கால்களுக்கும், கைகளுக்கும் நல்ல உடற்பயிற்சி.

பாத்திரம் தேய்ப்பதால் கைகளுக்கு வேலை அளிக்கப்படுகிறது.

வீட்டை துடைப்பதன் மூலம் கூடுதல் கலோரிகள் குறையும்.

படிக்கட்டு பயிற்சி :

உங்கள் வீடு அல்லது கட்டிடத்தில் உள்ள படிக்கட்டுகளில் நீங்கள் அடிக்கடி ஏறி, இறங்கி பயிற்சியை மேற்கொள்ளலாம். உங்கள் வீட்டு படிக்கட்டுகளில் இந்த பயிற்சி செய்வது, உடலிலுள்ள கலோரிகளை எரிக்க உதவும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.