;
Athirady Tamil News

காங்கிரஸ் தலைவர் தேர்தல்- கே.என். திரிபாதி வேட்பு மனு நிராகரிப்பு..!!

0

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ஜார்கண்ட் மாநில முன்னாள் அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான கேஎன் திரிபாதி ஆகியோர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், வேட்புமனுக்கள் குறித்து ஆய்வு இன்று நடைபெற்றதாக கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார். இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. வேட்புமனுவை விதிமுறைகளின் படி பூர்த்தி செய்யாததால் கே.என் திரிபாதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக மதுசூதன் மிஸ்த்ரி கூறினார். அவரது வேட்புமனுத் தாக்கலின் போது மொத்தம் 20 படிவங்கள் பெறப்பட்டன. அவற்றில் நான்கு கையொப்பங்கள் மீண்டும் மீண்டும் போடப்பட்டிருந்ததால் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அக்டோபர் 8ந் தேதி கடைசி நாள். அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இடையே நேரடிப் போட்டி உறுதியாகி உள்ள நிலையில், 8ந் தேதிக்குள் யாரும் வாபஸ் பெறா விட்டால், 17ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் மதுசூதன் மிஸ்த்ரி கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.