;
Athirady Tamil News

தீபாவளியை முன்னிட்டு ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது..!!

0

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆண்டுக்கு ஒருமுறை அதாவது தீபாவளி பண்டிகையையொட்டி 10 நாட்களுக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்த கோவிலில் கடைசி நாளன்று பூஜை செய்து தீபம் ஏற்றப்பட்டு, பிரசாதம் படைக்கப்படும். இதையடுத்து ஓராண்டு கழித்து நடை திறக்கும்போது கோவிலில் ஏற்றப்பட்ட தீபம் அணையாமலும், படைக்கப்பட்ட பிரசாதம் கெட்டுக்போகாமல் இருக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படுவதால் ஹாசனாம்பா கோவிலுக்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளியையொட்டி வருகிற 13-ந்தேதி(நேற்று) முதல் 27-ந்தேதி வரை ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று கோவில் நடை திறக்கப்பட்டது. நல்லநேரத்தில் மதியம் 12.14 மணிக்கு ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது. மந்திரி கோபாலய்யா, பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ., கலெக்டர் அர்ச்சனா, ஹாசனாம்பா கோவில் நிர்வாக அதிகாரி ஜெகதீஷ், போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். முதல்நாளன்று கோவில் நடைதிறந்ததும் கோவில் சுத்தப்படுத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதையொட்டு கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.