;
Athirady Tamil News

மேட்டூர் அணை நீர்மட்டம் 111.5 அடியாக சரிவு!!

0

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,328 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி சற்று அதிகரித்து விநாடிக்கு 1408 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது . அணையிலிருந்து காவிரியில் 12,000 கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 12,400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 112.2 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 111.5 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இதே நிலையில் நீடித்தால், அணை நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.