;
Athirady Tamil News

கேரளாவில் இருந்து வெளியேறிய பிரித்தானிய F-35B போர் விமானம்

0

கடந்த ஐந்து வாரங்களாக கேரளாவில் சிக்கித் தவித்த பிரித்தானிய ரோயல் கடற்படையின் F-35B போர் விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்
ஹைட்ராலிக் கோளாறு காரணமாக F-35B ஸ்டெல்த் போர் விமானமானது கடந்த ஜூன் மாதம் கேரளாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, அதை சரிசெய்ய பிரித்தானியாவிலிருந்து ஒரு நிபுணர் குழுவும் வரவழைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஜூலை 21ம் திகதி அந்தப் போர் விமானத்திற்கு வெளியேறும் அனுமதி கிடைத்தது, இதனையடுத்து ஜூலை 22ம் திகதி பகல் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்படும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான F-35B, பிரித்தானியாவின் HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கேரியர் ஸ்ட்ரைக் குழுவின் ஒரு பகுதியாகும். இந்தோ-பசிபிக் பகுதியில் செயல்பட்டு வந்துள்ளது, சமீபத்தில் இந்திய கடற்படையுடன் கூட்டு கடல்சார் பயிற்சிகளையும் முடித்திருந்தது.

ஜூன் 14 ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் பறந்து கொண்டிருந்த போர் விமானத்தில் ஒரு கோளாறு ஏற்பட்டு கேரளாவுக்கு மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குறைவான எரிபொருள் அளவு மற்றும் பாதகமான வானிலை காரணமாக, விமானி அருகிலுள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முடிவெடுத்தார். மட்டுமின்றி, இந்திய விமானப்படை, சிக்கலில் சிக்கிய போர் விமானத்தை மீட்டு, திருவனந்தபுரத்தில் தரையிறங்க வசதி செய்தது.

ரோயல் விமானப்படை

அடுத்த சில வாரங்களில், போர் விமானத்தை அதன் சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். எடுத்த முயற்சிகள் அனைத்தும் ஏமாற்றமளித்தது.

இந்த நிலையில், போர் விமானத்தை பழுதுபார்ப்பதற்கான உபகரணங்களுடன் ரோயல் விமானப்படை நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய ஒரு பெரிய குழு இந்தியா வந்தது.

இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில், தரையிறங்கும் கட்டணம் மற்றும் தினசரி பார்க்கிங் கட்டணம் உட்பட, இந்த விமானம் அதிக செலவை ஏற்படுத்தியது. F-35B விமானத்திற்கு தினசரி பார்க்கிங் கட்டணம் ரூ.26,000 க்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டது, இது 35 நாட்களுக்கு ரூ.9 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.