;
Athirady Tamil News

லட்சம் பணத்துடன் தவறவிடப்பட்ட கைப்பை; தவித்த ஆசிரியர் ;பொலிஸ் உத்தியோகஸ்தரின் நேர்மை

0

பசறை மத்திய மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் ஆசிரியர் ஒருவரின் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தவறவிட்ட பணப்பையை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் கண்டெடுத்து உரியவரிடம் ஒபடைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தவறவிட்ட பணப்பையை கண்டெடுத்த லுணுகலை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் ஒருவர் பசறை பொலிஸாரிடம் இன்று (23) ஒப்படைத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கைபையை தொலைத்த ஆசிரியர்
பசறை பல்லேகம பகுதியில் இருந்து கடமைக்கு செல்லும் குறித்த ஆசிரியை தனது இரு பிள்ளைகளை பசறை இசில்பத்தன பாடசாலைக்கு விடுவதற்கு சென்ற வேலை பசறை பிபிலை வீதியில் பசறை 13 ம் கட்டை பகுதியில் 170,000 ஆயிரம் ரூபாய் பணத்துடன் கைப்பையை தவறவிட்டுள்ளார்.

ஆசியை பசறை மத்திய மாக வித்தியாலய பாடசாலைக்கு கடமைக்கு வந்து பார்க்கும் போது கைப்பை இருக்கவில்லை. பின்னர் பல இடங்களில் தேடியபோதும் கைப்பை கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடமை நிமிர்த்தம் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் இருந்து பதுளைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகதர் ஆசியரின் கைப்பையை அவதானித்துள்ளார்.

அதனை எடுத்து பார்த்தபோது பணம் இருந்ததுள்ளது. உடனே குறித்த கைப்பையை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் ஆசிரியருக்கு தன்னுடன் கடமை புரியும் மற்றொரு ஆசிரியையிடமிருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அழைப்பில் நீங்கள் தவற விட்ட கைப்பை பசறை பொலிஸ் நிலையத்தில் உள்ளதாக தெரிவித்து உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பசறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று தவற விட்ட கைப்பையை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்டார். இந்நிலையில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் நேர்மையான செயலுக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.