மாவைக் கந்தன் சப்பரம்

வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ சப்பர திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது.
மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து உள்வீதியுலா வந்த மாவை கந்தன் இரவு 10 மணியளவில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
சப்பரத்தில் மாவைக்கந்தன் வெளிவீதியுலா வரும் போது, வாண வேடிக்கை நிகழ்வுகளும் இடம்பெற்றது.