;
Athirady Tamil News

எச்1 பி விசா பணியாளரின் துணைவர் வேலை பார்க்கலாம்: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

0

எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்களின் கணவர் அல்லது மனைவி அமெரிக்காவில் வேலை பார்க்கலாம் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது எச்-1பி விசாவில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, அதன்படி, அமெரிக்காவில் எச்-1பி விசாவில் குடியேறுபவரின் துணைவர் அங்கு பணியாற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரி ‘’வேலையை காப்பாற்றுங்கள்’’ (சேவ் ஜாப்ஸ்) என்ற அமைப்பின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், ‘’ஒபாமா காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை திருத்த வேண்டும். அமெரிக்க நிறுவனங்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் எச்-1பி விசா பணியாளர்களின் துணைவர்கள் வேலை பார்க்கின்றனர். இதனால் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்கவில்லை,’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி தன்யா சுட்கான், ‘’எச்-4 விசா மூலம் அமெரிக்காவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் வேலை பார்க்க உள்துறை அமைச்சகத்துக்கு நாடாளுமன்றம் அனுமதி அளிக்கவில்லை என்பதே மனுதாரரின் முதன்மையான வாதமாக உள்ளது.

அதே நேரம், குடிவரவு மற்றும் தேசியம் சட்டத்தின் அடிப்படையில் நாடாளுமன்றம் இதனை சீரமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, எச்-1பி விசாவில் உள்ளவர்களின் துணைவர் அமெரிக்காவில் வேலை பார்க்கலாம்,’’ என்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.