;
Athirady Tamil News

அலை மொழி – 06 நூல் வெளியீட்டு விழா!! (PHOTOS)

0

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் தீவகம் வடக்கு கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய அலை மொழி – 06 நூல் வெளியீட்டு விழா நேற்று (31) வெள்ளிக்கிழமை முற்பகல் அனலைதீவு ஐயனார் ஆலய அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி சுகுணாளினி விஜயரத்தினம், அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய அதிபர் நா.இராதாகிருஸ்ணன், வடலூர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஓய்வுநிலை அதிபர் திருமதி கௌரி கேதீஸ்வரநாதன், ஓய்வுநிலை உத்தியோகத்தர் வை.அருச்சுனன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

யாழ்.மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி சுகுணாளினி விஜயரத்தினம் அலை மொழி நூலை வெளியிட்டு வைக்க முதற்பிரதியை அனலைதீவு அரிகரபுத்திர ஐயனார் ஆலய பொருளாளர் க.வாமதேவன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டன.

அனலைதீவு ஓய்வுநிலை நூலகர் க.சௌந்தரராஜசர்மா நூல் வெளியீட்டுரையையும் யாழ்.பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் சிவஸ்ரீ குமாரசுவாமிநாதக் குருக்கள் (கவிஞர் வீரா) நூல் மதிப்பீட்டுரையையும் ஆற்றினர்.
இந்த விழாவின்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.