;
Athirady Tamil News

ரூ.500 கோடி வாய்ப்பை நிராகரித்த பெண்., 6 மாத சம்பளத்தை சேமித்து ரூ.32,600 கோடி நிறுவனத்தை உருவாக்கி சாதனை

0

தனது 6 மாத சம்பளத்தை சேமித்து வேலையை ஆரம்பித்த இந்த பெண், தற்போது ரூ.32,600 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளராக அமெரிக்க ஆண்களின் திமிரை உடைத்துள்ளார்.

உலகம் அமெரிக்காவை ஒரு முற்போக்கான நாடாகக் கருதலாம், ஆனால் பல பழமைவாத நம்பிக்கைகள் இன்னும் அமெரிக்க சமூகத்தில் உள்ளன.

நீண்ட காலமாக, அமெரிக்க சமூகத்தின் பெரும் பகுதியினர் பெண்கள் வணிகத்தை வெற்றிகரமாக நடத்த முடியாது என்று நம்புகிறார்கள். இந்த வேலையை ஆண்களால் மட்டுமே செய்ய முடியும். இந்த கருத்து காரணமாக, பெண் தொழில் முனைவோர் நிதி பெறுவதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

ஆனால், இந்த அமெரிக்கக் கருத்தை பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபரும், ஃபின்டெக் நிறுவனமான ஸ்டாக்ஸின் (Stax) இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுனீரா மதானி (Suneera Madhani) உடைத்துள்ளார். சுனிராவின் நிறுவனம் இன்று ஃபின்டெக் (financial technology) துறையில் உச்சத்தை தொட்டு வருகிறது.

சுனீராவின் ஐடியாவை சிலர் ‘முட்டாள்தனம்’ என்று கூறினர். ஆனால், தந்தையின் ஆலோசனையின் பேரில், சுனிரா தனது யோசனையை செயல்படுத்த முடிவு செய்தார். அண்ணனுடன் சேர்ந்து தனது ஆறு மாத சம்பளத்தில் கிடைத்த பணத்தில் Stax நிறுவனத்தை தொடங்கினார். இன்று இந்த ஸ்டார்ட்அப் மிகப்பாரிய நிறுவனமாக மாறிவிட்டது.

பாகிஸ்தானிய வம்சாவளி
சுனீரா மதானி பாகிஸ்தானை சேர்ந்தவர். அவரது பெற்றோர் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா சென்றனர். அப்பா அமெரிக்காவில் தொழில் தொடங்கினார். ஆனால், சில காலத்தில் பெரும் இழப்பை சந்தித்தார். இதனால் அவரது தந்தை மிகவும் கஷ்டப்பட்டார்.

சுனிரா புளோரிடா பல்கலைக்கழகத்தில் நிதியியல் படித்தார். இதற்குப் பிறகு பேமெண்ட் செயலி நிறுவனமான First Data-வில் பணியாற்றத் தொடங்கினார். வணிக உரிமையாளர்களுக்கு பணம் செலுத்தும் முனையங்களை விற்பதே அவரது வேலை.

சுனிராவின் யோசனைக்கு யாரும் செவிசாய்க்கவில்லை
சுனீரா தனது பணியின் போது தனது நிறுவனத்தின் payment platform வாடிக்கையாளர்களிடமிருந்து சேவைக்காக குறிப்பிட்ட சதவீதத்தை எடுத்துக்கொள்வதை கவனித்துள்ளார், அதேசமயம் பல வாடிக்கையாளர்கள் பிளாட் ரேட் அடிப்படையிலான மாதாந்திர சந்தாவை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். வாடிக்கையாளர்களுக்கு இந்த விருப்பத்தை வழங்குமாறு அவர் தனது நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆனால், இதனால் எந்த பயனும் இல்லை என சுனிராவின் இந்த யோசனையை அவர்கள் நிராகரித்தனர்.

ஒரு நிறுவனத்தைத் தொடங்கும்படி அறிவுறுத்திய தந்தை
சுனீரா தனது யோசனையை பெற்றோரிடம் விவாதித்தார். அவரது யோசனையை மற்றவர்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக, அவரது யோசனையை செயல்படுத்துவதற்கு ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ஏன் தொடங்கக்கூடாது என்று அவரது தந்தை அவருக்கு அறிவுறுத்தினார். அனால், நிதி என்ற பெயரில் அவருடைய ஆறு மாத சம்பளம் மட்டுமே அவரிடம் இருந்தது.

Stax-ன் அடித்தளம் 2014-ல் போடப்பட்டது..
சுனீரா மதானி தனது சகோதரர் ரஹ்மத்துல்லாவுடன் இணைந்து 2014-ஆம் ஆண்டில் Stax நிறுவனத்திற்கு அடித்தளம் அமைத்தார். மற்ற கட்டண தளங்கள் விற்பனை மாதிரியின் சதவீதத்தில் வேலை செய்யும் போது, ​​ஸ்டாக்ஸ் பிளாட் ரேட் மாதாந்திர சந்தா மாதிரியில் வேலை செய்யத் தொடங்கியது.

சுனிரா Silicon Valleyக்குக்குப் பதிலாக Orlando-வைத் தனது தொழிலுக்குத் தேர்ந்தெடுத்தார். அங்கு ஆரம்பத்திலேயே 100 வாடிக்கையாளர்களைப் பெற்றார்.

சுனீரா மதானி நிறுவனத்தை இலங்கை பணமதிப்பில் ரூ.568 கோடிக்கு விற்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அவர் அதை நிராகரித்தார்.

இன்றைய மதிப்பு ரூ.32,600 கோடி
சுனீராவின் நிறுவனமான Stax-ன் இன்றைய மதிப்பு (1 Billion USD) இலங்கை பணமதிப்பில் ரூ.32,600 கோடி ஆகும். இவரது நிறுவனத்தில் 300 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளில், ஸ்டாக்ஸ் 23 பில்லியன் டொலர் மதிப்பிலான பரிவர்த்தனைகளை செய்துள்ளது. சுனிரா CEO School என்ற சுயஉதவி குழுவையும் உருவாக்கியுள்ளார். சுமார் 3 லட்சம் உழைக்கும் பெண்கள் இதில் இணைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.