;
Athirady Tamil News

கைலாசா எங்கே உள்ளது? நீதிமன்ற கேள்விக்கு நித்தியானந்தா சீடர் விளக்கம்

0

நீதிமன்ற கேள்விக்கு நித்தியானந்தா சீடர் பதிலளித்துள்ளார்.

நித்தியானந்தா எங்கே?
மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று தனி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். இதனை எதிர்த்து நித்யானந்தா மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதுகைலாஷா நாடு எங்கு உள்ளது, அங்கு எப்படி செல்வது, நித்யானந்தா எங்கு உள்ளார், கைலாஷா நாட்டுக்கு செல்வதற்கு விசா, பாஸ்போர்ட் வேண்டுமா உள்ளிட்ட பல கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.

சீடர் பதில்
இதற்கு நித்யானந்தாவின் தரப்பில் ஆஜரான அவரது சீடர் அரச்சனா, ஆஸ்திரேலியா அருகே யுஎஸ்கே என்கிற கைலாசா ஐக்கிய நாடு என்ற தனி நாட்டில் நித்யானந்தா வசித்து வருகிறார். இந்த நாடு ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு எனத் தெரிவித்தார்.

மேலும், நித்யானந்தா தரப்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதி கோரினார். இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை, வழக்கை ஒத்திவைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.