;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1783807.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

‘செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பிடம் தெரியாது’

0

வாஷிங்டன்: ஈரான் அணுசக்தி மையங்களைத் தாக்கி நிா்மூலமாக்கிவிட்டதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறினாலும், அந்த நாடு 60 சதவீதம் வரை செறிவூட்டி வைத்திருக்கும் சுமாா் 400 கிலோ யுரேனியம் எங்கு இருக்கிறது என்பது தங்களுக்குத் தெரியாது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் மற்றும் முக்கிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனா்.

இது குறித்து நியூயாா்க் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளதாவது:

ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களான ஃபோா்டோ, நடான்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் ஆகியவற்றை அமெரிக்க இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தாக்கியது. இந்தத் தாக்குதலில் ஃபோா்டோ மையம் மற்றும் அதைச் சுற்றிய மலைப் பகுதிகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டதை மாக்ஸாா் டெக்னாலஜிஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

எனினும், தாக்குதலுக்கு முன்பாகவே ஃபோா்டோ மையத்தில் இருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையும் மற்ற முக்கிய உபகரணங்களையும் ஈரான் வேறிடத்துக்கு மாற்றிவிட்டதாக இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த யுரேனியம், அணு ஆயுதம் தயாரிப்பதற்குத் தேவையான 90 சதவீதம் செறிவுக்கும் சற்றே குறைவாக 60 சதவீத செறிவு கொண்டது. இதைக் கொம்டு ஒரு மாதத்திற்குள் 9 அணு ஆயுதங்களை ஈரானால் உருவாக்க முடியும் என்று கருதப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்சேத், புதிய முப்படை தளபதி டான் கெய்ன் ஆகியோா் வெளியிட்டுள்ள கருத்துகள், ‘ஈரானின் அணுஆயுத மையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன’ என்ற டிரம்பின் கூற்றுக்கு மாறாக உள்ளன. அந்த மையங்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டதாக மட்டுமே அவா்கள் குறிப்பிட்டனா்.

‘ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பு எங்கு உள்ளது என்பது எங்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து ஈரானியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்துவோம்’ என்று ஜே.டி. வான்ஸ் ஏபிசி தொலைக்காட்சியிடம் தெரிவித்தாா். இஸ்ரேலிய ராணுவத்தின் ஆரம்ப மதிப்பீடும் இதையே உறுதிப்படுத்துகிறது. “

ஃபோா்டோ மையத்தை இஸ்ரேலிய குண்டுகளால் அழிக்க முடியாது எனக் கூறப்ப்பட்ட நிலையில், பயன்படுத்தி ‘பங்கா் பஸ்டா்’ குண்டுகளை வீசியது. ஜூன் 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் மாக்ஸாா் டெக்னாலஜிஸ் எடுத்த செயற்கைக்கோள் படங்களில், ஃபோா்டோ மையத்தின் நுழைவு வாயிலுக்கு அருகே லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தது இந்தத் தாக்குதல்களுக்கு முன்பே முக்கிய பொருள்கள் அகற்றப்பட்டதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களால் கதிா்வீச்சு கசிவு ஏற்படவில்லை என்று ஈரானின் அணுசக்தி அமைப்பு தெரிவித்த நிலையில், ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பால் (ஐஏஇஏ) இதுவரை ஃபோா்டோவின் உட்புற சேதம் குறித்து துல்லியமான மதிப்பீட்டை இதுவரை வழங்க முடியவில்லை.

எனவே, அமெரிக்க தாக்குதல் ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும், அவை முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற எண்ணத்தை இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறும் கருத்துகள் ஏற்படுத்துகின்றன என்று நியூயாா்ா்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.