;
Athirady Tamil News

கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் யார் என தெரியாது

0
video link-
https://fromsmash.com/.N.6etPPl1-dt

கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது.ஆனால் நிதி மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றது.மேலும் இந்த ஆட்சியாளர்கள் கேலிகூத்துக்களை மக்களுக்கு காட்டி ஆட்சியை பிடித்திருந்தார்கள்.எனவே மக்கள் தெளிவு அடைய வேண்டும்.நல்ல தலைவர்களை உருவாக்குங்கள்.ஒருவருக்கு வாய்ப்பு வழங்காமல் அவர் எவ்வாறு செய்வார் என கேலித்தமாக பேசக்கூடாது.சஜீத் பிரேமதாச நாட்டில் உள்ள ஏழை மக்களின் மனதை வென்றவர்.அவரை எதிர்காலத்தில்  தெரிவு செய்வதன் ஊடாக பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என சம்மாந்துறை பிரதேச சபையின்   உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந்  தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பில் இன்று அம்பாறை மாவட்டம் புதிய வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில்  விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது

இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என எல்லோரும் கூறுகின்றனர்.இன்று அபிவிருத்தி அடைந்த நாடு என்று சிலர்  கூறுகின்றார்கள்.இவ்வாறு கூறிய போதிலும் எப்போது எமது நாடு அபிவிருத்தி அடைவது என்று கேட்க விரும்புகின்றேன்.அதாவது அபிவிருத்தி அடைவதற்கு தடையாக இருக்கின்ற தலைவர்களை   மக்கள்  தெரிவு செய்வதனால் தான் இவ்வாறான கேள்விகள் எம் மத்தியில் எழும்புகின்றது.

கோட்டபாய ராஜபக்சவிற்கு அரசியல் வகிபாகம் எதுவும் கிடையாது.அவரது குடும்ப பின்னணியில் வந்தவருக்கு மக்கள் ஆணை வழங்கி இருந்தார்கள்.வந்தவர் விவசாயிகளின் பிரச்சினையில் கைவைத்தார்.எமது நாடானது விவசாய நாடாக பல ஆண்டுகாலமாக இருக்கின்றது.இவரது வீழ்ச்சிக்கு காரணம் இந்த விவசாயிகளின் வயிற்றில் அடித்தமையாகும். தற்போது இந்த ஆட்சியில் இருப்பவர்கள் காலத்தில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்கள்.இதனால் இன்று ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஆட்கள் இல்லை.எனவே தான் இந்த ஆட்சியில் பாதிக்கப்படுகின்ற மக்கள் ஒன்றிணைந்து மிக விரைவில் இந்த ஆட்சிக்கு எதிராக வீதிக்கு இறங்குவார்கள் என்பதில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

எனவே தான் இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு முன்னெடுப்பும் பொதுமக்களின் வயிற்றில் அடுப்பு எரிவது பொன்று உள்ளது.நிச்சயமாக இந்த அரசாங்கத்திற்கு  எதிராக பெரிய புரட்சியினை  இம்மக்கள் எதிர்காலத்தில் மேற்கொள்வார்கள்.இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் முன்னர் இருந்த ஆட்சியாளர்களை குற்றஞ்சாட்டி கொண்டிருந்தார்கள்.கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது.ஆனால் நிதி மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றது.மேலும் இந்த ஆட்சியாளர்கள் கேலிகூத்துக்களை மக்களுக்கு காட்டி ஆட்சியை பிடித்திருந்தார்கள்.எனவே மக்கள் தெளிவு அடைய வேண்டும்.நல்ல தலைவர்களை உருவாக்குங்கள்.ஒருவருக்கு வாய்ப்பு வழங்காமல் அவர் எவ்வாறு செய்வார் என கேலித்தமாக பேசக்கூடாது.சஜீத் பிரேமதாச நாட்டில் உள்ள ஏழை மக்களின் மனதை வென்றவர்.அவரை எதிர்காலத்தில்  தெரிவு செய்வதன் ஊடாக பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.