;
Athirady Tamil News

மெலோனி – டிரம்ப் இடையே தொடரும் வார்த்தை போர்

0

வாஷிங்டன்,

மெலோனி – டிரம்ப் இடையே நடந்து வரும் வார்த்தை போர் அமெரிக்கா -ஈரான் போரை விட தீவிரமாகியிருக்கிறது.

வார்த்தை போர்
ஒரு காலத்தில் சர்வதேச அரங்கில் மிகவும் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகக் கருதப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையேயான உறவு தற்போது முற்றிலும் சிதைந்து, பகிரங்க மோதலாக வெடித்துள்ளது.

அமெரிக்க ஜனாதி டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் மெலோனி இடையேயான வார்த்தை போர், சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டிற்குப் பிறகு, மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள கெஞ்சியதாகவும், இத்தாலியில் அவரது புகழ் சரிந்துவிட்டதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த மெலோனி, டிரம்ப் கூறியது அப்பட்டமான பொய் என்றும், இத்தாலியோ, நானோ யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை என்றும் கூறி இருந்தார்.

மீண்டும் வம்பிழுத்த டிரம்ப்
இந்த நிலையில் இத்தாலிய விமான ஓடுதளங்களை அமெரிக்கா பயன்படுத்த மெலோனி அனுமதிக்கவில்லை என்றும், தற்போது அமெரிக்காவுடன் மீண்டும் இணைந்து தனது செல்வாக்கை மீட்டெடுக்க அவர் முயல்வதாகவும்

இத்தாலியில் மெலோனிக்கு தொடர்ந்து மக்கள் செல்வாக்கு சரிந்து வருவதால், அதை உயர்த்திக் கொள்ளவே தன்னுடன் புகைப்படம் எடுக்க அவர் மிகவும் கெஞ்சியதாக கூறி மீண்டும் வம்பிழுத்தார் டிரம்ப்.

இதற்கும் பதிலடி கொடுத்த மெலோனி, உங்களின் நட்பு எந்த விதத்திலும் என் செல்வாக்கை உயர்த்தவில்லை. இத்தாலியின் நலனைக் காப்பதில்தான் என் செல்வாக்கு உள்ளது. என்னை பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம், முதலில் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள் என மெலோனி பதிலடி கொடுத்துள்ளார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.