;
Athirady Tamil News

கடற்படையில் 3 அதிநவீன போர்க்கப்பல்கள்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

0

கொல்கத்தா,

மத்​திய அரசின், ‘தற்​சார்பு இந்​தி​யா’ திட்​டத்​தின் கீழ் என்​எஸ் துனகிரி, ஐஎன்​எஸ் அக்​ராய், ஐஎன்​எஸ் சன்​ஷோதக் ஆகிய 3 அதிநவீன கப்பல்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கொல்​கத்​தாவைச் சேர்ந்த பொதுத்​துறை நிறு​வன​மான கார்​டன் ரீச் ஷிப் பில்​டர்ஸ் அண்ட் இன்​ஜினீயர்ஸ் இந்த 3 கப்​பல்​களை​யும் மிக நேர்த்​தி​யாகக் கட்டி முடித்​துள்​ளது.

”உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த 3 அதிநவீன போர்க் கப்பல்களையும் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஒரே நேரத்​தில் வெவ்​வேறு திறன்​களைக் கொண்ட 3 முன்​னணிக் கப்​பல்​கள் கடற்​படை​யில் இணைக்​கப்​படு​வது இந்​திய வரலாற்​றில் ஒரு மிகப்​பெரிய சாதனை​ ஆகும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது;

நாட்டின் அதிநவீன நீரியல் வரைபடவியல் கப்பலான ஐ.என்.எஸ் சன்ஷோதக் கப்பலை இணைப்பது மகிழ்ச்சியடைகிறேன். இந்த நேரத்தில் கடற்படைக்கும், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடற்படையில் புதிய கப்பல்களை சேர்ப்பது இந்தியாவின் வளர்ந்து வரும் தன்னிறைவுக்கான சான்றாகும்.

கடல்சார் வலிமை இல்லாமல் எந்தவொரு நாடும் ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்க முடியாது.

கப்பல் கட்டும் துறையில் புதிய தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா முன்னேறி வருகிறது.

கடல்சார் பொருளாதாரத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் திறன் இந்தியாவிடம் உள்ளது.”

இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.