கொழும்பு-கண்டி பிரதான வீதியில் ஏழு வாகனங்கள் மோதி விபத்து
கேகாலை மாவட்டம், கொழும்பு-கண்டி பிரதான வீதியில் உள்ள வரகொட பகுதியில் ஏழு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்து ஈற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது தனியார் பஸ் ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.