;
Athirady Tamil News

க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

0

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையைத் திட்டமிடப்பட்ட திகதியில் தொடங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பரீட்சைக்குத் தயாராவதற்கு மாணவர்களுக்குப் போதுமான நேரம் வழங்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரீட்சை அட்டவணையை மாற்றியமைக்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சு வலியுறுத்துகிறது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.