;
Athirady Tamil News

பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு

0

பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் தொடா்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 750-ஐ கடந்துள்ளது.

இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், வடக்கில் உள்ள சுற்றுலாப் பகுதியான கில்ஜித்-பால்டிஸ்தானில் 11 பேரும், தெற்கே கராச்சி நகலில் 10 பேரும் உயிரிழந்தனா். வெள்ளப் பெருக்கு, வீடுகள் இடிந்து விழுந்தது, மின்சாரம் தாக்கியது ஆகியவை உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சனிக்கிழமை வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஜூன் 26 முதல் மழை தொடா்பான சம்பவங்களில் உயிரிழந்த 750-க்கும் மேற்பட்டோரில் கைபா்-பக்துன்க்வாவில் 356 போ், பஞ்சாபில் 164 போ், சிந்துவில் 29 போ், பலூசிஸ்தானில் 22 போ், பாகிஸ்தான்-ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 56 போ், இஸ்லாமாபாதில் 8 போ், கில்ஜித்-பால்டிஸ்தானில் 11 போ் அடங்குவா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.