;
Athirady Tamil News

இலங்கைக்கு வந்த அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு ; ஈரானியர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்

0

இலங்கைக்கு அருகில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க உள் வெளியுறவுத்துறை கேபிள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அறிவிப்பில் தேனா கப்பலில் இருந்து தப்பியவர்களையும், தற்போது இலங்கை பொறுப்பேற்றுள்ள இரண்டாவது ஈரானிய கப்பலான IRIS Bushehr பணியாளர்களையும் ஈரானுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று இலங்கை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்கத் தாக்குதல்
ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டேனா’ போர்க்கப்பல், இலங்கைக்கு தென்மேற்கே உள்ள ஆழ்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது.

அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்த 84 பேரின் சடலங்கள் இலங்கை கடற்படை மீட்டதுடன் 35 பேரை மீட்டு காலி கராப்பிட்டிய சிகிச்கைக்காக அனுமதித்தனர்.

அத்துடன் வியாழக்கிழமை இரவு இலங்கை கடற்படை இரண்டாவது ஈரானிய கப்பலான ஐஆர்ஐஎஸ் பூஷெரிலிருந்து 208 பணியாளர்களை மீட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.