;
Athirady Tamil News

காங்கேசன்துறை -நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை மீண்டும் ஆரம்பம்

0

பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை-நாகப்பட்டினத்திற்கிடையேயான பயணிகள் படகுச்சேவை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமானது.

தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து 77 பயணிகளுடன் புறப்பட்ட சிவகங்கை பயணிகள் படகானது காங்கேசன்துறையை வந்தடைந்து. மீண்டும் 92 பயணிகளுடன் நாகப்பட்டினம் நோக்கி பயணித்தது.

கடந்த ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த சிவகங்கை பயணிகள் படகானது சுமார் நான்கு மாதங்களின் பின்னர் சேவையினை இன்று ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வாரத்தில் செவ்வாய் தவிர்ந்த 6 நாட்களும் சேவை இடம்பெறும் இரு வழிக்கட்டணமாக 28500 இலங்கை ரூபாய்கள் அறவிடப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.