;
Athirady Tamil News

உச்சமடையும் போர் சூழல் ; இந்திய பெருங்கடலில் 183 ஊழியர்களுடன் மற்றொரு ஈரானிய யுத்தக் கப்பல்

0

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட இக்கப்பல் கடந்த 4ஆம் திகதி முதல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

IRIS Lavan கப்பலானது கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அடைக்கலம் கோரியிருந்த நிலையில், மார்ச் 1ஆம் திகதி அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், அண்மைய நாட்களில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் தீவிரமான கடல்சார் சம்பவங்களுடன் ஈரானின் மூன்று போர்க்கப்பல்கள் தொடர்புபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.