;
Athirady Tamil News

ஓடுபாதையில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்! விமானிக்கு நேர்ந்த பரிதாபம்: வீடியோ

0

போலந்தில் விமானப்படையின் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார்.

தரையில் விழுந்த போர் விமானம்
போலந்து நாட்டில் விமான கண்காட்சிக்காக ஒத்திகையில் ஈடுபட்ட F-16 போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

வியாழக்கிழமை ராடோம் நகரில் நடந்த இந்த விபத்தில் போர் விமானத்தின் விமானி துர்திஷ்டவசமாக உயிரிழந்தார்.

விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி 31 வது தந்திரோபாய விமான தளத்தை சேர்ந்தவர் ஆவார்.

மாலை 5:30 மணியளவில் விழுந்த இந்த விபத்தில் வேறு யாரும் காயமடையவில்லை என போலந்து தேசிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்துக்கு முன்னதாக F-16 விமானம் பீப்பாய் சுழற்சி அடிப்பதையும், தரையில் விழும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.