;
Athirady Tamil News

யாழில் அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம்; வீதியில் சென்ற இளைஞனுக்கு அதிர்ச்சி

0

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது, வேன் ஒன்றில் பிரவேசித்தவர்கள் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞன் மீது சரமாரியாக வாள் வெட்டு
கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை , தனது அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை கலட்டி பகுதியில் வேன் ஒன்றில் வந்த வன்முறை கும்பல் இளைஞன் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

அதனை அடுத்து வீதியில் சென்றவர்கள் காயமடைந்த இளைஞனை மீட்டு , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.