;
Athirady Tamil News

பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு விஜயம்

0

பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் சீனாவுக்கு செல்லவுள்ளார்.

பிரதமரின் சீனாவுக்கான விஜயம் ஒக்டோபர் 12 முதல் 15 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தின் போது பிரதமர், ​​”ஒரு பகிரப்பட்ட எதிர்காலம் பெண்களின் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிக்கான புதிய, துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை” என்ற தலைப்பில் உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றுவார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய , சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரதமர் லி உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளுடனும் சந்திப்புக்களை நடத்துவார் என்றும் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.