;
Athirady Tamil News

கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்த தலிபான்! இந்தியர் என்றதும் கிடைத்த மரியாதை! வைரல் விடியோ

0

ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுலா சென்றிருந்த இந்தியர் ஒருவர், மோட்டார் பைக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் வழக்கமான சோதனைக்காக கையில் துப்பாக்கி ஏந்தி நின்றிருந்த தலிபான் வீரரிடம் தான் இந்தியர் என்று சொன்னதும் கிடைத்த மரியாதை, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் எல்லைக்குள், இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் நுழைய முயன்றார். அப்போது, அங்கு வழக்கமாக பாஸ்போர்ட் பரிசோதனை செய்ய நின்றிருந்த தலிபான் வீரர், வாகனத்தை நிறுத்தினார்.

இந்தியா சுற்றுலாப் பயணியிடம் இருந்த கேமராவில் சம்பவங்கள் அனைத்தும் பதிவாகிக் கொண்டிருந்தது.

கையில், துப்பாக்கியுடன், ஒருவர் வாகனத்தை நிறுத்தினால், அடுத்து என்ன நடக்கும் என்று ஒருவாரு யூகித்திருப்பர். ஆனால், அதற்கு எதிர்மாறாக நடந்தது.

வாகனத்தை நிறுத்தியவர், தன்னுடைய பாஸ்போர்ட்டை எடுக்க முயன்றுகொண்டே, தான் ஒரு இந்தியர் என்று தலிபான் வீரரிடம் அறிமுகம் செய்துகொள்கிறார்.

இதைக் கேட்டதும், தலிபான் வீரர், தன்னுடைய கையை நெஞ்சில் வைத்து மரியாதை செலுத்தியதுடன், நாட்டுக்குள் வரவேற்பதாகக் கூறி, பாஸ்போர்ட்டைக் கூட பரிசோதிக்காமல் உள்ளே வர அனுமதிக்கிறார்.

ஆப்கானிஸ்தான், அதனுடைய உண்மையான நண்பரை இப்படித்தான் வரவேற்கும் என்று இந்த விடியோவுக்கு தலைப்பிட்டு, அந்த சுற்றுலாப் பயணி, தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட அது தற்போது வைரலாகியிருக்கிறது.

அந்த விடியோவில், தலிபான் வீரர், தாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும், எங்கே செல்கிறீர்கள் என்றும் கேட்கிறார். அதற்கு, இந்தியர், தான் ஆப்கன் தலைநகர் காபூல் செல்வதாகவும் இந்தியாவிலிருந்து வருவதாகபும் பதிலளிக்கிறார். இந்தியர் என்ற வார்த்தையைக் கேட்டதும், தலிபான் வீரரின் முகத்தில் புன்னகை மலர்கிறது. அதற்குள் இந்தியர் தன்னுடைய பாஸ்போர்ட்டைக் காண்பிக்கிறார். அதற்கு, அந்த வீரர், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சகோதரர்கள், ஒரு பிரச்னையும் இல்லை, பாஸ்போர்ட் வேண்டாம், சோதனையும் இல்லை என்று கூறி அனுப்புகிறார்.

இந்த விடியோவுக்கு பலரும் நெகிழ்ச்சியான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அன்பு, அமைதி எப்போதுமே இதயங்களை வெல்லும் என்றும் நாம் எதிர்பாராத இடங்களில் எதிர்பாராமல் கிடைக்கும் மரியாதை நிச்சயம் பல மடங்கு உயர்ந்தது என்றும் பலரும் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.