;
Athirady Tamil News

வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை

0

மின்னல் தாக்கம் தொடர்பில் நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும் எனவும் முடியுமானவரை வீடுகளுக்குள் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் தொலைபேசிகள், மின்சார சாதனங்கள் எதையும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.