;
Athirady Tamil News

வவுனியாவில் பெய்து வரும் மழையினால் நொச்சிமேட்டையுடன் ஏ9 வீதி போக்குவரத்து முழுமையாக தடை

0

வவுனியாவில் பெய்து வரும் மழையின் காரணமாக ஏ9 வீதி போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளது

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கடும் மழையின் காரணமாக ஏ9 வீதியின் நொச்சிமோட்டை பாலம்பகுதியில் வெள்ள நீரானது வீதியை மேவி 3 அடிக்கு மேல் வேகமாக பாய்வதனால் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான ஏ9 வீதி போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளது

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதிகளிலிருந்து வவுனியா அல்லது தென் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் இரண்டு பக்கங்களும் நீண்ட வரிசையில் தரித்து நிற்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. பேரூந்துகளில் வந்த பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளிகியுள்ளனர்.

இதேவேளை ஏ9 வீதி போக்குவரத்தினை தடை செய்து தாண்டிக்குளம் மற்றும் பறநாட்டாங்கல் சந்தி ஆகிய பகுதிகளில் பொலிசார் வீதி தடை போட்டு அதற்கு அப்பால் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.