லண்டனில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு
லண்டன் ஒக்ஸ்போட்டிலும் இன்று மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.
தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு, தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் உள்ள துயிலும் இல்லங்களில் நினைவஞ்சலி நிகழ்வுகள் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்து.
இதனுடன் இணைந்த வகையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) ஏற்பாட்டில் லண்டன் ஒக்ஸ்போட்டிலும் நினைவஞ்சலி நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், நாடு கடந்து வசிக்கும் தமிழர்கள் பலர் கலந்து கொண்டு, தங்களின் உயிரிழந்த உறவினர்களுக்கு மலரஞ்சலி செலுத்தி மாவீரர் நாளை அனுஸ்டித்தனர்.

