;
Athirady Tamil News

எடப்பாடி பழனிச்சாமியாரையும் சந்தித்த கஜேந்திரன் குழு!

0

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

நேற்று வியாழக்கிழமை (18) இச்சந்திப்பு இரவு 10.15 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 40 நிமிட நேரம் இடம்பெற்றது.

இதன்போது ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு, தமிழர் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும்.

ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன. இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் கலந்துகொண்டிருந்தார்.

தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் இதில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP, பொ.ஐங்கரநேசன் (தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்), செ.கஜேந்திரன் (செயலாளர் ததேமமு), த.சுரேஸ் (தேசிய அமைப்பாளர்), க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி), ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) கலந்துகொண்டனர்.

அதேவேளை தமிழக முதலமைச்சர் MK ஸ்டானிலையும் கஜேந்திரன் குழுவினர் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.