;
Athirady Tamil News

நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட யாழ். மணிக்கூட்டு கோபுரம்

0

நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நேற்று செவ்வாய்கிழமை இரவு நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாணஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மின் அலங்காரத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

நிகழ்வின் ஆரம்பத்தில், நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆளுநர் அஞ்சலிச் சுடரை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மணிக்கூட்டு கோபுரத்தின் மின் அலங்காரங்களை ஒளிரச் செய்து வைபவத்தை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், யாழ். மாநகர சபையின் முதல்வர் வி.மதிவதனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.