தேனிலவு செல்வதற்கான சிறந்த இடமாக இலங்கை தெரிவு
இலங்கையை முதல் பத்து சுற்றுலா தலங்களில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பயண இணையத்தளமான TRIPADVISOR இணைத்துள்ளது.
அதற்கமைய, இலங்கை ஐந்தாவது சிறந்த நாடாக குறித்த இணையத்தளம் பெயரிடப்பட்டுள்ளது.
காலி மாவட்டம் 2026 ஆம் ஆண்டில் தேனிலவு செல்வதற்கான சிறந்த மாவட்டமாகவும் பெயரிடப்பட்டுள்ளது. 13 ஆவது இடம் எல்ல நகருக்கும், 22 ஆவது இடம் தங்காலை நகருக்கும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வருட கால கணக்கெடுப்பின் அடிப்படையில் இணையத்தளம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
சபாரிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பழங்கால கோயில்களில் இருந்து, சிகிரியா போன்ற இடங்கள், இலங்கை பற்றிய மதிப்புரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவை இந்த நாட்டின் கவர்ச்சியை அதிகரிப்பதாக TRIPADVISOR இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வறிக்கைக்கு அமைய, உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த இடமாக இந்தோனேசியாவின் பாலி கருதப்படுவதுடன், இரண்டாவது இடம் மொரிஷியஸுக்கும் மூன்றாவது இடம் மாலைதீவுக்கும் கிடைத்துள்ளது.