பாபா வாங்கா கணிப்பு படி உலகம் அழிவதற்கு இன்னும் எத்தனை வருடம் மீதமுள்ளது தெரியுமா?
பாபா வாங்காவின் கணிப்பு மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது, ஏனெனில் அது மனிதகுலத்தின் அழிவுக்கு ஏற்கெனவே ஒரு திகதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகிறது.
பாபா வங்கா 5079 ஆம் ஆண்டில் மனிதகுலத்தின் இறுதி அழிவு நிகழும் என்று கணித்துள்ளார். அந்த ஆண்டில், ‘நினைத்துப் பார்க்க முடியாத’ அளவிலான ஒரு பிரபஞ்ச நிகழ்வு, இந்தப் அண்டத்திற்கே முழுமையான அழிவைக் கொண்டுவரும்.
“அவரது தீர்க்கதரிசனம், மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மோதல்கள் மற்றும் இறுதியான அழிவு ஆகியவற்றை சித்தரிக்கும் ஒரு விரிவான காலவரிசையைப் பின்பற்றுகிறது.
“பாபா வாங்கா கணித்துள்ள உலகில் அழிவை ஏற்படுத்தப்போகும் முக்கிய திகதிகள்,
– 3005-ல் செவ்வாய் கிரகத்தில் போர்
– 3010-ல் சந்திரன் மோதல்
– 3797-ல் பூமியில் உயிரினங்களின் அழிவு
பாபா வாங்காவின் கூற்றுப்படி, 4300-களுக்குள் மனிதகுலம் தொழில்நுட்பரீதியாகவும், தார்மீகரீதியாகவும் முன்னேறி, அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். 4674-ஆம் ஆண்டில் நாகரிகம் அதன் உச்சத்தை அடையும், அப்போது பல கோள்களில் 340 பில்லியன் மக்கள் தொகை இருக்கும்.
மூன்றாம் உலகப் போர்
இது பாபா வாங்காவின் மிகவும் பரபரப்பான கணிப்புகளில் ஒன்றாகும். பாபா வாங்காவின் கணிப்புப்படி மூன்றாம் உலகப்போர் நிச்சயம் நடைபெறும். அறிக்கைகளின்படி, உலக நாடுகளிடையே அதிகரித்து வரும் பதட்டமான சூழல் பற்றி பாபா வாங்கா எச்சரித்துள்ளார். இதில் தைவானை சீனா கைப்பற்றுவதற்கான வாய்ப்பு மற்றும் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட வாய்ப்பு ஆகியவையும் அடங்கும்.
இயற்கைப் பேரழிவுகள்
இது 2026-ஆம் ஆண்டிற்கான மற்றொரு ஆபத்தான கணிப்பாகும். இது ஆபத்தான இயற்கை பேரழிவுகளைப் பற்றியது. அவரது கணிப்புகளின் படி, 2026-ல் அவர் பல தீவிரமான நிலநடுக்கங்கள், கடுமையான எரிமலை வெடிப்புகள் மற்றும் தீவிர வானிலை நிலைகளை முன்னறிவித்துள்ளார்.
ஏலியன்களுடன் தொடர்பு
மனிதர்கள் ஏலியன்களுடன் தொடர்பு கொள்வதற்கு நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றனர். 2026-ஆம் ஆண்டில் இந்த முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். 2026-ஆம் ஆண்டில் மனிதகுலம் வேற்று கிரக உயிரினங்களை எதிர்கொள்ளக்கூடும் என்று பாபா வாங்கா உறுதியாகக் கூறுகிறார்.