;
Athirady Tamil News

டொனால்ட் ட்ரம்ப்பை முந்திய மெலனியா ட்ரம்ப் ; எதில் தெரியுமா!

0

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் இருவருக்கும் இடையிலான மக்கள் விருப்பம் மற்றும் எதிர்ப்பு நிலையில் சுவாரசியமான வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடத்தப்பட்ட தனித்தனி கருத்துக் கணிப்புகளின்படி, டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் தலா 41 வீதமான மக்கள் விருப்பம் (Favorable) தெரிவித்துள்ளனர்.

தனித்தனி கருத்துக் கணிப்பு
ஜனாதிபதி ட்ரம்ப்பை பிடிக்காது என 56 வீதமானோர் தெரிவித்துள்ள நிலையில், மெலனியா ட்ரம்பிற்கு எதிரானவர்களின் எண்ணிக்கை 47 வீதமாக மாத்திரமே காணப்படுகின்றது. இதன்மூலம் ஜனாதிபதியை விட அவரது மனைவியின் மீதான எதிர்ப்பு நிலை குறைவாக உள்ளது.

மெலனியா ட்ரம்பின் வாழ்க்கை குறித்த புதிய ஆவணப்படம் (Documentary) திரையிடப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான மக்களின் கவனம் அதிகரித்துள்ளது.

இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், பொது மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேவேளை மெலனியா ட்ரம்ப் குறித்து நடத்தப்பட்ட மற்றுமொரு ஆய்வில், முன்னாள் முதல் பெண்களான மிச்செல் ஒபாமா அல்லது ஜில் பைடன் ஆகியோரை விட, மெலனியா ட்ரம்ப் ஊடகங்களினால் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்படுவதாக 59 வீதமான அமெரிக்கர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக ஆண்கள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மத்தியில் இவ்வாறான ஒரு நிலைப்பாடு வலுவாகக் காணப்படுகின்றது. இது குறித்து வெள்ளை மாளிகையின் பேச்சாளர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ட்ரம்ப் பொருளாதார மேம்பாடு மற்றும் எல்லைப் பாதுகாப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும், ஊடகங்கள் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.