;
Athirady Tamil News

ஈரான் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை: இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை

0

இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி காட்ஸ் கூறியதாவது: ஈரானைப் பொறுத்தவரை நமது இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஈரான் மீண்டும் அணுஆயுதம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

அதேநேரத்தில், அணுஆயுதம் தயாரிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. தனது அணுசக்தித் திட்டங்கள் அனைத்தும் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும் அந்நாடு விளக்கம் அளித்து வருகிறது.

இதற்கிடையே, லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுடன் இணைந்து இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றால், ஹிஸ்புல்லா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும், காசா, லெபனான் மற்றும் சிரியாவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 27-ந் தேதி நடைபெற்ற இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, புதிய ஆட்சி அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டுக்கு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், நெதன்யாகு தனது சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக ராணுவத்தை போரில் ஈடுபடுத்தக்கூடாது என்று ஐசன்கோட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.