இந்திய வம்சாவளி பெண் இங்கிலாந்தில் சுட்டுக்கொலை: வாலிபர் கைது
லண்டன்,
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் ஹவுன்ஸ்லோ பகுதியில் உள்ள செர்ட்சே சாலையில் உள்ள ஒரு வீட்டில், நவநீத் கவுர் (வயது 26) என்ற இந்திய வம்சாவளி பெண் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த லண்டன் போலீசார் பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த ரஜத் ஜஸ் வெல் என்ற இந்திய வம்சாவளி வாலிபர், அந்தப் பெண்ணைக் கொடூரமாக சுட்டுக் கொன்றது தெரியவந்தது.
உடனடியாக அந்த வாலிபரை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை மற்றும் சட்டவிரோத ஆயுதக் கட்டுப்பாடு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் லண்டனில் வாழும் இந்தியர்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.