புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா
புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா
தரம் – 01 புதுமுக மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் அதிபர் . சி. சிவநேந்திரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர் திரு. எஸ்.கே சண்முகலிங்கம், சூழகம் அமைப்பின் செயலாளர் திரு.கருணாகரன் நாவலன் மற்றும் ஆலய குருக்கள், ஓய்வுநிலை கல்விசார் அதிகாரிகள், இலங்கை வங்கி ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் பாடசாலை வளாகத்தில் பயன் தரும் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டதோடு இலங்கை வங்கியின் வேலணைக் கிளை உத்தியோகத்தர் ஊடாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
