அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படும் மாற்றம்
நேற்று மாலை 4 மணி முதல் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு நாட்டில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.