;
Athirady Tamil News

காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் கைது

0

மட்டக்களப்பு – காத்தான்குடி – பைசல் வீதியில், முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், 19 வயது இளைஞர் அருகில் இருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்பில் காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

விபத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி பலத்தை சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.