;
Athirady Tamil News

யாழில்.மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை – வியாபாரிகள் இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

0
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் 
அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்டு இருவரிடம் இருந்தும் 5.2 கிராம் மற்றும் 5கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அண்மையில் வேலணை பகுதியில் இடம்பெற்ற மாட்டு திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
You might also like

Leave A Reply

Your email address will not be published.