;
Athirady Tamil News

மைத்ரி விக்ரமசிங்க இன்று CIDயில் முன்னிலை

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்ரி விக்ரமசிங்க இன்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் (20) அவரை நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு, கடந்த 18ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்து கொள்வதற்காகவே மைத்ரி விக்ரமசிங்கவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.