;
Athirady Tamil News

பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வருடாந்த பரிசோதனை

0

பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற வருடாந்த பரிசோதனையின் போது அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன் போது அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.மேலும் காலை முதல் மாலை வரை பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவைப்பிரிவு நிலையங்கள் சுற்றுச்சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகள் , அலுவலகங்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன் பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.

அத்துடன் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரால் Honda Rancher All-Terrain Four-Wheel Vehicle (ATV) வாகனம் பரிசோதிக்கப்பட்டது.

இந்த சிறப்பு வாகனம் முதன்மையாக இலங்கை பொலிஸ் சுற்றுலா பிரிவு மூலம், சாதாரண வாகனங்கள் அணுக முடியாத கடற்கரை மற்றும் மணல் நிலப்பரப்புகளில் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்த ATV வாகனம் கடினமான நில அமைப்புகளிலும் திறமையான போக்குவரத்தை வழங்கி, அவசர சூழ்நிலைகளில் அதிகாரிகள் விரைவாக பதிலளிக்க உதவுகிறது. மேலும், அப்பகுதிக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.