நெதர்லாந்தின் இளம் பிரதமர் பதவியேற்பு
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக ராப் ஜெட்டன் திங்கள்கிழமை பதவியேற்றார்.
இதன்மூலம், நெதர்லாந்து வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் (38) பிரதமர் நாற்காலியில் அமரும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அரச மாளிகையில் நடைபெற்ற கோலாகல விழாவில், ராப் ஜெட்டன் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு அரசர் வில்லெம்-அலெக்சாண்டர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
150 இடங்களைக் கொண்ட நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் இக்கூட்டணிக்கு 66 இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால், ஒவ்வொரு சட்டத்தையும் நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயத்தில் ராப் ஜெட்டன் உள்ளார்.