குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்; பலர் படுகாயம்
குவைத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலின் காரணமாக பல ஊழியர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், விமான நிலையம் மற்றும் பயணிகளுக்கு சிறிய அளவிலான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் தெரிவித்துள்ளது.
குவைத் சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அதிகாரிகள் உடனடியாக சம்பவம் கையாளப்பட்ட இடத்தில் அவசரகால நடைமுறைகளை அங்கீகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.