;
Athirady Tamil News

கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்..

0

கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் திரு. ஆபிரகாம்லிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் அறநெறி மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், கொழும்பு பிரபல வர்த்தகருமான சொக்கர் மற்றும் நாகேஸ் என அன்புடன் அழைக்கப்படும் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரான கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் திரு. ஆபிரகாம்லிங்கம் அவர்களது பிறந்தநாள் வவுனியாவில் உள்ள அறநெறி மண்டபத்தில் கோலாகலாமாக கொண்டாடப்பட்டது..

வவுனியாவில் வசிக்கும் அறநெறி வகுப்பு மாணவ மாணவிகள் என பலரும் ஒன்றுகூடி பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக்வெட்டி கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதனைவிட அக்கிராமத்தில் அறநெறி வகுப்புக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கற்றலுக்கு உதவியாக அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைத்ததும் சிறப்பம்சமாகும்.

கனடாவில் வசிக்கும் இந்திரன் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு வறுமைகோட்டுக்கு உட்பட்ட வவுனியா புதுக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயக அறநெறி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக மாணவ சிறார்களும், பெற்றோர்கள் கலந்து கொண்டு இந்திரன் அவர்களின் சார்பாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

சித்தி விநாயக அறநெறி மாணவர் ஒருவரான திருமதி. சுதாஜினி செந்தில் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைபில் ஸ்ரீ சித்தி விநாயக அறநெறி ஆசிரியர் திருமதி. விஜிதா குணரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

ஸ்ரீ சித்தி விநாயக அறநெறி மாணவர்களின் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் கனடா இந்திரன் புங்குடுதீவு பிரபல வர்த்தகர் சொக்கர் என அழைக்கப்படும் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது குடும்பத்தின் எந்தவிதமான நிகழ்வு என்றாலும் அந்நிகழ்வினை தாயக உறவுகளோடு இணைந்து கொண்டாடி உதவி செய்து வருபவர்கள் என்பதை கட்டாயம் சொல்ல வேண்டும். அதுவும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக இவர்கள் பலவேறு வாழ்வாதார மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற நிகழ்ச்சி திட்டத்தினூடாக தொடர்ச்சியாக உதவி செய்து வருவது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவருக்கும் தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப்பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி மன்றம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
02.03 2026

கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
https://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..

https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.