கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த வருடம் ஏற்பட்ட குறைபாடுகள் அனைத்தும், அடுத்த வருடம் தீர்க்கப்பட்டு சிறப்பான முறையில் அனைத்து வசதிகளோடும் திருவிழா நடைபெறும் என யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவுக்கு பின்னரான நிலமைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே குரு முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.