;
Athirady Tamil News

ஈரான் போரால் அமெரிக்காவுக்கு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி செலவு: பென்டகன் தகவல்

0

வாஷிங்டன்,

அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், அதை நிரந்தரமாக்குவதற்காக கடந்த 11-ந்தேதி பாகிஸ்தானில் இரு தரப்பும் நேரடி பேச்சு வார்த்தை நடத்தின. ஆனால் ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் உள்ளிட்ட பல் வேறு அம்சங்களில் உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, ஈரானின் துறைமுகங்கள் உள்பட ஒட்டுமொத்த கடற்பகுதியையும் முற்றுகையிட்டு உள்ளது. இது ஈரானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

எனினும் லெபனானில் சமீபத்தில் இடைக்கால போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதால் ஹார்முஸ் நீரிணையை கடந்த 17-ந்தேதி முழுமையாக திறந்தது. இதை டிரம்ப் வரவேற்றாலும், ஈரான் துறைமுக முற்றுகையை அமெரிக்கா கைவிடாது என அறிவித்தார்.

இந்த நிலையில், அமைதி பேச்சுக்காக தற்காலிக போர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஈரான் போரினால் அமெரிக்காவிற்கு இதுவரை 25 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய்) செலவாகியுள்ளதாக பென்டகனின் தற்காலிக கணக்காய்வாளர் ஜூல்ஸ் ஹர்ஸ்ட் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

25 பில்லியன் டாலர் செலவிற்கு அதிநவீன ஆயுதங்கள் பயன்பாடு, கப்பல்கள் விமானங்கள், வீரர்களுக்கான செலவினம், பராமரிப்பு, போரில் இழந்த ஆயுதங்களுக்கான கணக்கு ஆகியவை காரணமாகும். போர் விமானங்கள் மற்றும் விமானங்கள், டிரோன்கள் மற்றும் ரேடார்கள் உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க ராணுவ சொத்துக்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை உறுதி செய்வதே முக்கியம் என்று கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.