;
Athirady Tamil News

கடந்த 72 மணி நேரத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்: 30-க்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு

0

கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் ஈரான் ராணுவ பலத்தை பெரும் அளவு சிதைத்து இருப்பதாக அமெரிக்காவின சென்ட்காம்(Centcom) தளபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தீவிரமடையும் மோதல்
ஈரான் எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் தீவிர கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஈரான் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவின் மத்திய கட்டளை தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியான அறிக்கைகளில், கடந்த மூன்று நாட்களில் ஈரானிய படைகள் மீது மிகப்பெரிய தொடர்ச்சியான மற்றும் ஆக்ரோஷமான தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் ஈரானின் 200 இலக்குகளை அமெரிக்க படைகள் வெற்றிகரமாக அழித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழிக்கப்பட்ட படைகள்
அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலில் ஈரான் கடற்படைக்கு மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 30 க்கும் அதிகமான ஈரானிய கடற்படை கப்பல்கள் அமெரிக்க படைகளின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் குறிப்பாக ஈரானின் விண்வெளி கட்டளை மையம் சிதைக்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

மேலும் கடந்த சில நேரத்திற்கு முன்னதாக ஈரானின் மிகப்பெரிய ட்ரோன் தாங்கி கப்பலை அமெரிக்கா அழித்து இருப்பதாகவும் கூப்பர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.