;
Athirady Tamil News

பொதுமக்களுக்கான விழிப்புணர்வு அறிவிப்பு

0
அஸ்வெசும பயனாளிகளிடம் அநாமதேய தொலைபேசி அழைப்பு எடுத்து தங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும், தங்கள் தொலைபேசி இலக்கத்திற்கு வரும் OTP இலக்கத்தினை தெரிவிக்குமாறு கோருகின்றார்கள். அதன் உண்மைத் தன்மை அறியாத சில பொதுமக்கள் தொலைபேசிக்கு வரும் OTP இலக்கத்தினை தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களுக்குரிய வங்கி கணக்கிலிருந்து இணையமூலம் பணம் களவாடப்படுகின்றன .
எனவே இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் தமது தொலைபேசி இலக்கத்திற்கு வரும் OTP இலக்கத்தினை ஏனையவர்களுக்கு பகிர்வதனை தவிர்க்குமாறும் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.